ஹபாரதுவவில் விபத்தில் கொல்லப்பட்ட ரஸ்ய பெண்ணின் மகள் அநாதரவான நிலையில் காணப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் கொல்லப்பட்ட ரஸ்ய பெண்ணிண் நான்கு வயது மகளை பொறுப்பேற்பதற்கு யாரும் அற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முச்சக்கரவண்டி புகையிரத விபத்தில் கொல்லப்பட்ட பெண் தனது மகளுடன் உனவட்டுன பகுதியில் வசித்து வந்துள்ளார்.
குழந்தைகளை பராமரிக்கும் நிலையமொன்றில் தனது மகளை வி;ட்டுவிட்டு சென்றவேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணிற்கு இலங்கையில் உறவினர்கள் எவரும் இல்லை என்பதால் உறவினர்கள் ரஸ்ய தூதரகம் ஊடாக தொடர்புகொள்ளும் வரை சிறுமி குறிப்பிட்ட குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்டிருப்பார்.