Our Feeds


Thursday, December 8, 2022

News Editor

முதலிடத்தை தவறவிட்ட எலான் மஸ்க்


 

உலகில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த  எலான் மஸ்க் அந்த இடத்தை இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3½ இலட்சம் கோடிக்கு (இந்திய ரூபா) விலைக்கு வாங்கினார்.

இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி (இந்திய ரூபா) மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தில் ரூ.3½ இலட்சம் கோடி (இந்திய ரூபா) முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது.

இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னோல்ட் உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னோல்ட் ரூ.15.2இ9 லட்சம் கோடி(இந்திய ரூபா)  சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

எலான் மஸ்க் ரூ.15.28 இலட்சம் கோடியுடன்(இந்திய ரூபா)  2-வது இடத்துக்கு இறங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் முதலிடத்தை எலான் மஸ்க் பிடித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னோல்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது.

இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

டெஸ்லாவின் பங்குதாரர்கள் கூறும் போது, ‘டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக இருந்தது’ என்றார்.

டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »