இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா பதவி விலகியுள்ளார்.
கடந்த 05ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜாவை பதவி விலகுமாறு கோரியதையடுத்து அவர் திடீரென பதவி விலகியுள்ளார். (a)