அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும் என்றும், சர்வதேச தரத்திலான பயிற்சிகளை வழங்கி வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைப் பெண்களுக்கு வெளிநாட்டில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுவதற்கு உயர்தரப் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.