உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், அபிவிருத்த அடைந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி குறித்து சீனா எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
சீனப் பிரதிநிதிகளுடன் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இறையாண்மைக் கடன் குறைப்பு மற்றும் நீண்ட கால நிலைத்தன்மை குறித்தும் இதன்போது கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.