களனி-கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பணிகளுக்காக 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலை கட்டடமொன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீயினால் பெருமளவான பொருட்சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.