நாளை (12) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
காலநிலை அவதான நிலையம் உள்ளிட்ட வானிலை தொடர்பான நிறுவகங்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர், இன்று (11) பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நன்றி: தமிழன்