நாட்டின் கட்டுமான தொழில்துறையை சேர்ந்த இளம் தொழில்துறையினர் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான தொழில்துறை பெரும்நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையிலேயே கட்டுமான தொழில்துறையை சேர்ந்த இளம் தொழில்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
மூன்று அல்லது நான்கு வருட அனுபவம் கொண்ட பொறியியலாளர்கள் மற்றும் அளவு மதிப்பீட்டாளர்கள் - இளவயதினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என இன்டநசனல் கொன்ஸ்டிரக்சன் கொன்சோர்டியம் என்ற அமைப்பின் தலைவர் நாமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்துறையில் நன்கு அனுபவம் உள்ள ஆழமாக காலூன்றியவர்கள் இன்னமும் நாட்டை விட்டு வெளியேற முயலவில்லை இரண்டு மூன்று வருடகால அனுபவமுள்ள பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் காரணமாக சம்பளங்கள் குறைவடைந்துள்ள அல்லது பெறுமதி இழந்துள்ள நிலையில் புதிய வரிகள் (34 வீதம் ) கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என இந்த தொழில்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
லீசிங்கிற்கு எடுத்த கார்கள் உள்ளன,வீடுகளிற்கான வங்கி கடன்களை செலுத்தவேண்டியுள்ளது எங்களின் மூத்த சகாக்களை போல இல்லாமல் புதிய வருமான வரி காரணமாக நாங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கு சிரமப்படுகின்றோம் என இளம் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனேக திட்டங்கள் முடங்கிய நிலையில் உள்ளன, செலுத்தவேண்டிய கட்டணங்களும் உள்ளன,இதன் காரணமாக கட்டுமான நிறுவனங்கள் தப்பிப்பிழைப்பதற்கான நெருக்கடியில் சிக்குண்டுள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர நிர்மான நிறுவனங்களே அதிக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.