2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என்பதால் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (11) பிற்பகல் அனுராதபுரம் விகாரைக்கு வருகைத்தந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் அனுராதபுரம் வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதமஸ்தானாதிப பூஜ்ய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீ மகா போதியை வணங்கி ஆசி பெற்றார்.