2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரசிற்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான சனத் நிஷாந்த, பிரசன்ன ரணதுங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு இலங்கை உயர்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட மற்றும் ஜனாத் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் “கோட்டகோகம’ பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஐவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது