இலங்கை தொடர்பான சீனாவின் பொருளாதார கொள்கைகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு விமர்சிப்பதற்கும் இந்தியாவுடன் அந்த கட்சிக்கு உள்ள உறவுகளிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.
சீனா தொடர்பில் அவர் முன்வைத்துள்ள கருத்துக்களிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இந்தியாவின் ஆதரவுதான் காரணமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவா பிரித்தானியாவா அவுஸ்திரேலியாவா என்பது பிரச்சினையில்லை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயமென்றால் நானும் எனது கட்சியும் அதற்கு எதிராக குரல்கொடுப்போம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதான இந்தியாவின் செல்வாக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள சாணக்கியன் இத்தகைய அனுமானம் மிகவும் இயல்பானது ஏனெனில் இந்தியா தமிழ் மக்கள் விவகாரத்தில் எப்போதும் அனுதாபத்துடன்உள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும் சீனாவிமர்சிப்பதற்கு இந்தியா தான் காரணம் என்பது உண்மையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எப்போதும் எங்களிற்கு நண்பனாக உள்ளது குறிப்பாக தமிழ் மக்களிற்கு என தெரிவித்துள்ள சாணக்கியன் ஆனால் இதற்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சீனா தமிழ் மக்களின் தேவைகளை கருத்தில் கொள்ளவில்லை எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியி;ல் கடல் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டவேளை எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வடக்குகிழக்கில் நாங்கள் சீனாவை வரவேற்கவில்லை என தெரிவித்தார்,தமிழ் மக்களை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்ளாததே இதற்கு காரணம் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா நாளை நாட்டிற்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால் நாங்கள் இந்தியாவை கண்டிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.