மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார் வெல்லமடம கடலிலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (18) இடம்பெற்ற குறித்த விபத்தினால் அதிர்ச்சியடைந்த 50 வயதுடைய விரிவுரையாளர், மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெவிநுவரவில் இருந்து மாத்தறை நோக்கி வந்து கொண்டிருந்த போது கார் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்த போது, அருகில் இருந்த மக்கள், சாரதி ஆசனத்தில் இருந்த விரிவுரையாளரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.