கோட்டே நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கில் அவரின் பெயர் கூறி அழைக்கப்பட்ட போது, நடுத்தர வயதுடைய நபரொருவர் சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்தமையினால் நீதிமன்றில் சிரிப்பொலி எழுந்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரோஹிதவுக்கு எதிரான வழக்கு நேற்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நடுத்தர வயதுடைய ஒருவர் சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்துள்ளார்.
காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் – முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஒரு குழுவினருக்கு கோட்டை நீதவான் திலினி கமகே ஏற்கனவே பயணத்தடை விதித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சரின் பெயர் கூறப்பட்ட போது, ரி சேர்ட் அணிந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர் சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்தார்.
நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் ரோஹித அபேகுணவர்தன என்ற பெயரை கூறியபோது, ரோஹிதவுக்குப் பதிலாக மேற்படி நடுத்தர வயதுடைய நபர் சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த பலர் சிரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அருகில் இருந்த சிறைக் காலவலர்கள், அவரை சாட்சிக் கூண்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.