2019 ஏப்ரல் 21 தினத்தன்று, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில், 3 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிலா மர்சுக் என்ற 8வது சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்து கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்க ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நன்றி: தமிழன்