ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில், ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை தொடர்பில் கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை பொலிஸார் இன்றைய தினத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
மேப்ப நாய்களும் பரிசோதனைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் புற பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக மாணவிகள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.