தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் 6 ஆவது நாடாக இலங்கை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC தனது சமீபத்திய அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, இலங்கையில் குற்றச் சுட்டெண் உயர்ந்து 4.64 சத வீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கையில் 30 பாதாள உலகக் குழுக்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கொழும்பு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, வட கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.