இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான மாணவர்களின் 70 சதவீத சீருடைக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சீனா சீருடை துணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதற்கமைய இந்த நன்கொடையின் முதலாவது தொகுதியாக 3 மில்லியன் மீற்றர் 38 ஆயிரம் பெட்டிகளில் பொதியிடப்பட்டு , 20 கொல்கலன்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளில் 70 சதவீதமான வெட்டிய துணிகளை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மிகுதி 30 சதவீத துணிகளை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளத