Our Feeds


Friday, December 16, 2022

ShortNews Admin

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்



எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது. பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும். பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »