சுமார் 5 கோடி ரூபாவுக்கு தேங்காய் எண்ணெய்யைப் பெற்று அதற்காக
செல்லுபடியற்ற காசோலைகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஊவாதென்ன சுமண தேரரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (24) உத்தரவிட்டார்தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கடந்த 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலேயே அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.