அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியின் 54 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரிக்குள் அண்மைக்காலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக கல்லூரி ஆணையாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு உத்தரவுகளை வழங்கியது.
இதனடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 54 மாணவர்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ருஹுணு கல்வியியல் கல்லூரியால் நடத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் தனியான விசாரணையும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.