Our Feeds


Thursday, December 1, 2022

News Editor

5 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மந்த போஷனையால் பாதிப்பு


 

நாட்டில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9 சதவீதமானோர் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 5 வயதுக்கு குறைவான 59.4 சதவீதமான சிறுவர்கள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுவதாக குறித்த மதிப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் 5 வயதை விடக் குறைவான 5 சிறுவர்களில் மூவர் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் 5 வயதிற்கும் குறைவான சிறுவர்களில் எடை குறைந்தோர் எண்ணிக்கை 12.2 சதவீதத்திலிருந்து 15.3 சதவீதமாக  அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »