நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கான (13,14,15,16ம் திகதிகள்) மின்வெட்டு குறித்த அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த தினங்களில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.