திருகோணமலை – கந்தளாய் – அக்போபுர பகுதியில் 4 வயது குழந்தையொன்றை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரே, இந்த குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நன்றி: TC