இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காதமை காரணமாக துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மாவை 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டதாக பியோடேல் பால் மா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்தார்.
துறைமுகத்தில் காணப்பட்ட பால் மா கையிருப்பை விடுவிக்காவிட்டால் அது பழுதடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு இடம்பெற்றால் 600 மில்லியன் ரூபா நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.