Our Feeds


Tuesday, December 6, 2022

ShortNews Admin

சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான பாய் என்ற 41 வயது கஜீமா வத்தையை சேர்ந்தவர் அதிரடி கைது.



கொழும்பு - பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் மற்றும் விதைப் பை வர்த்தகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரதான தரகரான  நபரை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 41 வயதான கஜீமாவத்தையைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு குழுவொன்று சிறுநீரக வியாபாரம் மற்றும் விதைப் பை வர்த்தகம் தொடர்பில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், பிரதான தரகரான பாய் என  அறியப்படும் நபர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

எனினும் அவரது உண்மையான அடையாளம் தொடர்பில் உறுதி செய்துகொள்ள சி.சி.டி.யினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில்,  பொரளை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற 5 முறைப்பாடுகள் தொடர்பில், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம்  முதல் தகவலறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சி.சி.டி. பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில்  சில்வாவின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகளில் ஒரு அங்கமாக புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யும் போது,  சட்டவிரோத விதைப்பை வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இந்த இரு உடலுறுப்பு விற்பனையிலும் பாய் என்ற நபர் தொடர்புபட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டிருந்தன. 

இந்நிலையிலேயே மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,  சிறுநீரக வியாபாரத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »