முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தண்ணீர் காய்ச்சுவதற்காக ஹீட்டரை ஒன் செய்துவிட்டு தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த குழந்தையின் தாயும் மூத்த சகோதரியும் வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு தாயாருக்கு தெரியப்படுத்தியபோது, குழந்தை படுக்கையில் எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையைக் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உள்ள மின்சாரம் அணைக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்சாரம் மூலம் தண்ணீரை சூடாக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.