இலங்கை கடற்படையின் 222 அதிகாரிகளும் 3,548 ஏனைய பிரிவு அதிகாரிகளும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.