Our Feeds


Thursday, December 15, 2022

News Editor

3.58 பில்லியன் டொலர் பெறுமதியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தார் மஸ்க்



 உலகின் 2 ஆவது நிலை பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க், தனது வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மேலும் 22 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் பெறுமதி 3.58 பில்லியன் டொலர்களாகும். 

கடந்த திங்கட் முதல் புதன்கிழமை வரையான நாட்களில் இப்பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாக  அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வருடத்தில் இலோன் மஸ்க் விற்பனை செய்த டெஸ்லா நிறுவனப் பங்குகளின் பெறுமதி சுமார் 40 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இம்முறை அவர் டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்தமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

கடந்த ஒக்டோபர் இறுதியில்,  44 பில்லியன் டொலர்கள் விலையில் டுவிட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கினார். 

அதன்பின் சில நாட்களில், 3.95 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 19.5 மில்லியன் பங்குகளை இலோன் மஸ்க் விற்பனை செய்தார். 

உலகின் மிகப் பெரிய செல்வந்தர் எனும் நிலையை இவ்வாரம் இலோன் மஸ்க் இழந்தமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான, பிரான்ஸை சேர்ந்த பேர்னார்ட் ஆர்னோல்ட் தற்போது உலகின் முதல் நிலை செல்வந்தராக விளங்குகிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »