Our Feeds


Thursday, December 15, 2022

ShortNews Admin

அங்கொட லொக்காவின் சகா 'ஜில்' க்குச் சொந்தமான 35 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!



பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான அங்கொட  லொக்காவின் சகா எனக் கூறப்படும் 'ஜில்' என்பவருக்குரியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 12 கிலோ போதைப்பொருள்களுடன் இரு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 14 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்துள்ளனர்.


அங்கொட, டயர் கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் மறைந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 கோடி ரூபா  என மதிப்பிடப்பட்டுள்ளது.

'ஜில்' என அழைக்கப்படும் தனுஷ்க புத்திக என அழைக்கப்படும் நபர் இந்தியாவுக்குச் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

`ஜில்' என்பவர் இந்த போதைப்பொருட்களை படகுகள் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என  பாதுகாப்பு பிரிவனர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »