இங்கிலாந்தின் தென்கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் ஒரு நிமிடத்திற்குள்ளாக 30 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சினிமா படங்களில் வங்கித்திருட்டு, கார் திருட்டு தொடர்பான திரைப்படங்கள் பிரபலமானவை. திருட்டு சம்பவங்களுக்காக கொள்ளையர்கள் போடும் திட்டங்களும், அதனை செயல்படுத்துவதில் உள்ள சவாலும் கொண்ட திரைப்படங்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர் எனலாம்.
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி இத்தகைய ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் உள்ள பல்பன் தொழிற்பூங்காவில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்கள் திருடப்பட்டுள்ளன.
இலங்கை ரூபாயில் 30 கோடி மதிப்பிலான மொத்தம் 5 சொகுசு கார்களை வெறும் ஒரு நிமிடத்திற்குள் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
We are currently investigating an incident where multiple luxury cars were stolen from a unit on Brentwood Road in #Bulphan on 11 November.
Did you witness anything suspicious? If so, please contact us. pic.twitter.com/2huktS0PJI
— Essex Police (@EssexPoliceUK) December 5, 2022