பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் தலைக்கு 2 கோடி அறிவித்து உத்தரபிரதேசத்தின் பாஜக தலைவர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி பிரதமர் மோடியை ‘குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர்’ என கடுமையான வார்த்தையால் விமர்சனம் செய்தார். இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய இந்த வார்த்தையை திரும்பப் பெறுவதுடன் பாகிஸ்தான் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
உத்தர பிரதேசத்தில் நடை பெற்ற போராட்டத்தின் போது அந்த மாநில பாஜக விவசாய பிரிவு தலைவர் மனுபால் பன்சால் தெரிவித்ததாவது:
நாம் மிகவும் மதித்து போற்றக் கூடிய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் நாகரீகமற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவேதான், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.2 கோடி சன்மானத்தை அறிவித்துள்ளேன்.
இவ்வாறு மனுபால் பன்சால் கூறினார்.