பதுளையில் நேஊணற்று (07) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக பதுளை மாவட்டத்தின் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, எல்ல ஆகிய பகுதிகளில் நேற்று (07) இரவு முதல் பலத்த காற்று வீசுவதனால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.