Our Feeds


Friday, December 2, 2022

News Editor

2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதே எமது இலக்கு ; அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ


 

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். 2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும், 2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும் வரவழைப்பதே எமது இலக்காகும்.

இவ்வாண்டில் இதுவரையில் சுமார் 7 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டில் 8 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே எமது இலக்காகும். தற்போது வரை சுமார் 7 இலட்சத்தை அண்மித்த சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். எதிர்காலத்தில் எமது இலக்குகளை படிப்படியாக அடைய முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும் , 2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும் வரவழைப்பதே எமது இலக்காகும். நாட்டில் 49 சுற்றுலா வலயங்களை வர்த்தமானிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் குறித்த வலயங்கள் இரவு வேளைகளில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 3 மாதங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தற்போது தலைதூக்கியுள்ளோம். எனவே எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு படிப்படியாக முன்னேற முடியும் என்று நம்புகின்றோம். டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் இலங்கையர்கள் பெருமளவானோர் நாட்டுக்கு விஜயம் செய்வர் என்று எதிர்பார்க்கின்றோம். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக தற்போது பெமளவான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உள்நாட்டைப் போன்று சில சர்வதேச ஊடகங்களும் எதிர்மறையான செய்திகளே வெளியிடுகின்றன. உண்மையில் இவை எதற்காக இவ்வாறு செயற்படுகின்றன என்று தெரியாது. சுற்றுலாத்துறையினூடாக மாத்திரம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். விமானங்களில் ஆகக் கூடியது 300 சுற்றுலாப்பயணிகளை மாத்திரமே நாளொன்றுக்கு அழைத்து வர முடியும். ஆனால் சொகுசு சுற்றுலா கப்பல்கள் மூலம் நாளொருக்கு சுமார் 3,000 சுற்றுலாப்பயணிகளை வரவழைக்க முடியும்.

அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளால் யால சரணாலயம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வசந்த காலத்தைப் போன்று காட்சியளித்தது. இதனைப் போன்று சுற்றுலாத்துறையை படிப்படியாக மேம்படுத்தி அதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு முன்னர் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெற்ற 4 பில்லியன் டொலர் வருமானத்தை 15 பில்லியன் வரை அதிகரிப்பதே எமது இலக்காகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »