தங்க நகைகள் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அடங்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ, கஹதுடுவ, ஹொரணை, மொரகஹஹேன, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.
பிலியந்தலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் வேடமணிந்த இவர்கள், மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகளில் செல்லும் பெண்களிடம் கைப்பை, தங்க நகைகளையும் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பணத்தையும் கொள்ளையடித்த பல சம்பவங்களுடன் தொடர்புடையர்களுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.