Our Feeds


Friday, December 9, 2022

News Editor

திருமண வைபவத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி – 50 பேர் படுகாயம்


 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில். இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.

இதன்போது 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல் அமைச்சர் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »