மாலைதீவுக்கு தொழிலுக்கு அனுப்புவதாகக் கூறி 197 தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சுமார் 84 இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்தார் எனக் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மாலதீவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சுற்றுலா விடுதிகளின் பணிக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாக கூறி பிளாக்வாட்டர்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 197 தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி மீண்டும் தோட்டத்துக்கு வந்த தரகர், நவம்பர் 15ஆம் திகதி தம்மை மாலைதீவுக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் அதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி குறித்த தொழிலாளர்களிடம் கூறி ஒரு தொகையை வசூலித்துள்ளார்.
இதன்படி, தலா 12,500 ரூபா பெற்றுக்கொண்ட குறித்த தரகர், தோட்ட தொழிலாளர்களை மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த தரகர் தலைமறைவாகியதாகவும் பொலிஸில் முறைப்பாட செய்யப்பட்டுள்ளது.