(எம்.வை.எம்.சியாம்)
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் சனிக்கிழமை (டிச.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போவத்த வீதியின் கொஸ்ஹென பிரதேசத்தில் குளியாப்பிட்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதடைய சம்பதுகம, மங்களலெலிய பிரதேசத்தைச் சேர்நதவராவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.