பதவியிலிருந்து நீக்கப்பட்ட பெரு ஜனாதிபதி பெட்ரோ கஸ்டில்லோவை 18 மாதங்கள் தடுத்துவைக்குமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து அவசரநிலைமையின் கீழ் ஆட்சி செய்வதற்கு பெட்ரோ கஸ்டில்லோ முயன்ற நிலையில், நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை மூலம் அவர் பதவி நீக்கப்பட்டதுடன், உடனடியாக கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குற்றவியல் பிரேரணையை தவிர்ப்பதற்கு அவர் முயன்றார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில், பெட்ரோ கஸ்டில்லோவை விளக்கமறியலில் வைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி கோரினர்.