டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. (a)