உலக நாடுகள் பலவற்றில் அண்மைக்காலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவடைந்து கொண்டே செல்வதால் பல நாடுகள் புதுப்புது அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவாக இலங்கை மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டமானது வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.