இந்த ஆண்டில் மாத்திரம் சர்வதேச முதலீட்டாளர்களுடன் 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் 41 உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் எனவும், எஞ்சிய 82 உடன்படிக்கைகளும் மறுமுதலீட்டுகளுக்கான உடன்படிக்கைகள் எனவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியா, ஜப்பான், நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் இவர்களில் அடங்குவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.