நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட கப்பலின் சுக்கானில் அமர்ந்தவாறு 11 நாட்கள் பயணம் மேற்கொண்ட மூவர் ஸ்பெயினின் கனரி தீவுகளில் மீட்கப்பட்டுள்ளனர்.
183 மீற்றர் நீளமுள்ள அலிதினி இரண்டு எனும் கப்பலின் சுக்கானில் சட்டவிரோதக் குடியேறிகள் அமர்ந்திருப்பதைக் காட்டும் படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
கப்பலில் இம்மாதம் 17ஆம் திகதி புறப்பட்ட அவர்கள் தண்ணீர்ப் பற்றாக்குறை, குறைவான உடல் வெப்பநிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. உள்நாட்டுச் சட்டப்படி சட்டவிரோத குடியேறிகள் உடனடியாக நாடு திரும்பவேண்டும். இருப்பினும் அவர்கள் அகதிக்கான தகுதியைப் பெற்றால் ஸ்பெயினில் இருப்பது சாத்தியம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.