Our Feeds


Friday, December 9, 2022

ShortNews Admin

கடும் குளிரால் 10இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு.



கடும் குளிருடனான வானிலை காரணமாக 10இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர்கள் போராடி வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்கு போராடியும் வருகின்றன.

இந்த நிலையில், தீ மூட்டி கால்நடைகளின் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும் அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டத்தில் இடம்பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »