(எம்.மனோசித்ரா)
அமெரிக்காவின் சொகுசு கப்பலான அசாமரா க்வேஸ்ட் 600 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 400 பணியாளர்களுடன் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
03 ஆம் திகதி கொழும்பில் நங்கூரமிடப்பட்டிருந்த இக்கப்பல் இன்று (04) திங்கட்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றயடைவுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ள மூன்றாவது சொகுசு சுற்றுலாப்பயணக்கப்பல் இதுவாகும்.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி உலகின் அதி சொகுசு கப்பலான 'மெய்ன் சிஃப் 5' கப்பல் 2014 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 922 பணியாளர்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதே வேளை நவம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவின் 'வைக்கிங் மார்ஸ்' என்ற சொகுசு பயணிகள் கப்பல் 900 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.