வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களால் இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் இவ்வருடம் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவுள்ளது உலக உலக வங்கி அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்த மைல் கல்லை கடக்கும் முதலாவது நாடு இந்தியா ஆகும்.
அமெரிக்கா மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பலமாhன தொழிலாளர் சந்தை மற்றும் சம்பள உயர்வு ஆகியன இந்த அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளது.
இவ்வருடம் வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பணம் 5 சதவீதத்தினால் அதிகரிகத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
கீழ் மட்ட மற்றும் மத்திய தர வருமானமுடைய நாடுகளுக்கு இப்பணம் முக்கியமானதாகவுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்ததாக, புலம்பெயர்ந்த மக்களால் அதிக பணம் பெறும் நாடுகளாக மெக்ஸிக்கோ, சீனா, எகிப்து, பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.
அண்மைய வருடங்களில், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற அதிக வருமானம் வழங்கப்படும் நாடுகளில் சிற்நத சம்பளம் வழங்கப்படும் தொழில்களைப் பெறுவதற்காக அதிக எண்ணிக்iகாயன இந்தியர்கள் சென்றதால் அவர்களால் கூடுதலான பணம் அனுப்ப முடிந்துள்ளது.