ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். R