கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சம்பளப் பிரிவில் உதவி முகாமையாளராக கடமையாற்றிய நபரொருவர் அங்கு பணிபுரிந்த 4 வைத்தியர்களின் சம்பளத்தை தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்து இரண்டு முறை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா நேற்று (5) 10 வருட சிறைத் தண்டனை விதித்தார்.
மோசடி செய்த தொகையை விட மூன்று மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, வழக்குடன் தொடர்புடைய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபர் ஒரு கோடியே அறுபத்தாறாயிரத்து எழுநூற்று எழுபது ரூபா தொகையை தன்னால் செலுத்த முடியாது என திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 10 ஆண்டுகள் 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.