நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
அத்துடன், 15 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 10000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள “மென்டவுஸ்” சூறாவளி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழை, கடும் குளிர் மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது.
இந்த சீரற்ற வானிலையினால் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 2720 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, வடமாகாணத்தில் நேற்று முன்தினம் (08) இரவு நிலவிய கடும் குளிருடனான சீரற்ற வானிலையினால் சுமார் 500 மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நுவன் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்.