இன்று(01) முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
3,740 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்லொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.