கொழும்பு பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில், அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக சத்திர சிகிச்சை தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், இராஜகிரிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களின் ஊடாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சிறுநீரகத்தை வழங்குவோருக்கு பணத்தை பெற்றுத் தருவதாக கூறிய போதிலும், உறுதியளிக்கப்பட்ட வகையில் பணம் இதுவரை வழங்கப்படவில்லை என அறிய முடிகின்றது.